tamilnadu

img

இந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வரி மற்றும் வட்டி விகிதத்தில் மாற்றம் தேவை - எஃப்ஐசிசிஐ

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை உடனடியாக மேம்படுத்த வட்டி மற்றும் வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று எஃப்ஐசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்று மாதங்களில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது. இருப்பினும், உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார நுகர்வு இந்தியாவின் பொருளாதார நிலை மிக மந்தமான நிலையிலேயே காணப்படுகிறது. தற்போதைய இந்தியாவின் இந்த நிலை சர்வதேச நாடுகள் உடன் போட்டி போடும் நிலையில் இல்லை, அதாவது மற்ற நாடுகளுடன் பொருளாதாரத்தில் ஈடு கொடுக்கும் அளவுக்கு இந்தியா இல்லை என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce & Industry - FICCI) தெரிவித்துள்ளது.

சமீபத்தில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலைக்கு, குறைந்து வரும் முதலீடுகள், குறைந்து வரும் ஏற்றுமதி மற்றும் நுகர்வோரின் தேவைகள் போன்ற சில விஷயங்களே காரணம் ஆகும். இதை சரிசெய்தாலே பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி காணும் என்று எஃப்ஐசிசிஐ கூறுகிறது. 

மேலும் தனது அறிக்கையின் மூலம் சில தகவல்களையும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. அதிலும் அடுத்து வரும் பட்ஜெட்டில் அரசு சில விஷயங்களை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றும் எஃப்ஐசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலை ஒரு சாதாரண விஷயம் அல்ல, இது ஒரு நீண்டகால விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயமாக உள்ளது. வேலை பற்றாக்குறை மற்றும் பொருளாதார மந்தம் உள்ளிட்ட பல பொருளாதார சவால்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதற்கு தகுந்தாற்போல, மோசமான பொருளாதாரத்தை எதிர்கொள்ளும், சவால்களை எதிர்கொள்ள கூடிய நிதி அமைச்சரும் வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தற்போது, கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைகள் குறைவு மற்றும் விமான துறையிலும் உள்ள சிக்கல்கள் ஆகியவையே தொழில்துறை உற்பத்தியை பாதிக்கின்றது. இந்த பிரச்சனைகளுக்கான தீர்வை கண்டறிவதன் மூலம் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் வளர்ச்சி காணும். மேலும், புதிய அரசாங்கம் இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க, வரியை குறைக்க வேண்டும். அதோடு நுகர்வோர் தேவையை அதிகரிக்க ஏழை விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் (86 டாலர்) வழங்க வேண்டும். மேலும், ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியாளர்களுக்கான வரி சலுகைகளையும் பரிசீலிக்க வேண்டும். 

இதை அடுத்து தொழில்துறையில் உள்ள நிறுவனங்களின் சுமையை குறைப்பதற்காக வரியை குறைக்க வேண்டும். அதோடு எல்லா துறைகளிலும் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் ஏற்றுமதி துறையும் வளர்ச்சி அடையும்.

சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கிக்கு வட்டி விகிதத்தை குறைக்க எஃப்ஐசிசிஐ  கேட்டுக் கொண்டது. ஆனால் வட்டி குறைப்பினால் மக்களுக்கு பலன் கிடைத்ததாக தெரியவில்லை, சில வங்கிகள் வர்த்தக ரீதியாக இந்த வட்டி குறைப்பை செய்ததாகவும் தெரியவில்லை. வட்டி விகிதங்கள் உயர்ந்த நிலையிலேயே உள்ளது. இதனால் அரசு இதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

கடந்த 2014-ஆம் ஆண்டில், கச்சா எண்ணெய் விலை குறைந்தே காணப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

சர்வதேச அளவில் நிலவி வரும் அமெரிக்க மற்றும் சீனா இடையே நிலவி வரும் வர்த்தக பிரச்சனை இந்த இரு நாடுகளை மட்டும் அல்ல, உலகளாவிய அளவில் பொருளாதாரத்தில் ஒரு மந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சர்வதேச அளவில் வர்த்தகமும் மந்தமாகவே உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஏற்றுமதியும் பாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உள் நாட்டிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி நிகழ்ந்து வரும் நிச்சயமற்ற தன்மைகளாலும், பொருளாதாரத்தில் நிகழ்ந்து வரும் சவாலான விஷயங்களாலும் பொருளாதாரம் மந்த நிலையிலேயே இருந்து வருகிறது. ஆக இந்தியாவில் உடனடியாக பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த ஒரு ஊன்றுகோல் தேவைப்படுகிறது என்றும் எஃப்ஐசிசிஐ கூறியுள்ளது. 

மேலும் வரும் பட்ஜெட்டில் உரிய நிதிக் கொள்கைகளை சீரமைப்பதன் மூலம் முதலீடுகளை அதிகரிக்க ஒரு வாய்ப்பாக அமையும். இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, எஃப்ஐசிசிஐ போன்ற தொழிற்துறை நிறுவனங்களுடன் அரசாங்க அதிகாரிகள் ஆலோசனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.


 

;